top of page

இரண்டு மூன்று வாரங்களில் அமைச்சரவையில் மாற்றம் - ஜம்ரி காடீர்

  • S.KUMARA
  • Nov 8, 2025
  • 1 min read
ஜம்ரி காடீர்
ஜம்ரி காடீர்

புத்ராஜெயா - இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் செனட்டர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜம்ரி காடீர் கூறியுள்ளார்.


புத்ராஜெயா ஐடியா மூடுவிழாவில் உரையாற்றிய அவர் இந்த வைபவம் ஆண்டுதோரும் நடைபெறவேண்டும் என்று எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.


"நான் அமைச்சரவை மாற்றத்தில் நீடிப்பேனா என்று தெரியாது ஆனால் இந்த நிகழ்ச்சி வருடந்திர விழாவாக நடைபெற வேண்டும் என விரும்புகிறேன், இதற்கு பிரதமர் ஆதரவு கொடுப்பார் என்று பெரிதும் நம்புகிறேன்.


"நான் அமைச்சரவையில் நீடிப்பேனா அல்லது எப்படி என்பது இரண்டாம் பட்சம், ஆனல் இது தேசிய திட்டம்,


"பிரதமர் சிரிப்பின் மூலம் சிக்னல் காட்டிவிட்டார். நானும் இன்னும் இரண்டு மூன்று வாரம்தான்," என்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் பேசினார்.


தேசிய முன்னணியின் புதுச்செயலாளருமான அவர் கடந்த 2022 டிசம்பர் 22ஆம் தேதியன்று இஸ்தானா நெகாராவில் அமைச்சராக சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.



Comments


bottom of page