top of page

எண்ணெய் லாரியுடன் கார் மோதியதில் அண்ணன் தம்பி இருவரும் பலி

  • kumara885
  • Oct 31, 2025
  • 1 min read

எண்ணெய் லாரியுடன் கார் மோதியதில் அண்ணன் தம்பி இருவரும் பலி


சீபு - அண்ணன் தம்பி இருவர் பயணம் செய்த கார் எண்ணெய் லாரி ஒன்றுடன் விபத்துக்குள்ளாகியதில் இருவரும் மரணமடைந்தனர்.


இத்துயரச் சம்பவம் இங்குள்ள கனோவிட்டில் இருக்கும் ஊலு மஜாவ் தேசியப் பள்ளி அருகே நிகழ்ந்ததாக கனோவிட் மாவட்ட காவல் துறைத் தலைவர் துணை சூப்பரின்தெண்டன் ஜூனிகள் உஜால் கூறினார்.


இறந்த இருவரும் மூசா மிங்காட் வயது 50 அவருடைய அண்ணன் பூடின் மிங்காட் வயது 67 என அடையாளம் உறுதி செய்யப்பட்டது.


" சம்பவத்தின் போது மூசா பெரோடுவா அக்சியா ரக காரை ஓடி சென்ற வேளையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எண்ணெய் ஏற்றி வந்த லாரியை மோதியதால் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தனர்," என்று மேலும் கூறினார்.


இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்காக கனோவிட் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லபட்டதாகக் கூறினார்.


இவ்விபத்தை போலிசார் செக்‌ஷன் 41(1) 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மரணம் விளைவிக்கும் வகையில் அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றத்திற்காக விசாரணை செய்து வருகின்றனர்.


Comments


bottom of page