top of page

கடை படிக்கட்டில் இந்திய பிரஜையின் சடலம்

  • S.KUMARA
  • Nov 7, 2025
  • 1 min read
கடைப் படிக்கட்டில் இந்தியப் பிரஜையின் சடலம்
கடைப் படிக்கட்டில் இந்தியப் பிரஜையின் சடலம்

செர்டாங் - இங்குள்ள பூசாட் பண்டார் பூச்சோங்கின் கடைவீடொன்றின் படிக்கட்டில் இந்திய பிரஜை ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது அவ்வட்டார மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்த தகவலை செர்டாங் காவல் தலைமையகம் வியாழன் மாலை சுமார் 7.03 மணிக்கு பொதுமக்களிடமிருந்து பெற்றது என்றூ அம்மாவட்ட தலைவர் உதவி ஆணையர் முகம்மது ஃபாரிட் அஹ்மாட் கூறினார்.


தகவல் கிடைத்த மறு நொடியே காவல் துறையினார் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.


"அங்கு சுமார் 49 வயது இந்திய நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கடைவீட்டின் படியில் பிணமாகக் கிடந்தார்.


"அவ்வாடவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற் சந்தேகிகப்படுவதால் விசார்ணை முடக்கிவிடப்பட்டுள்ளது.


"காவல் துறை முதல் விசாரணை அறிக்கையை செக்‌ஷன் 302 குற்றவியல் பிரிவின் கீழ் பதிவு செய்து கொலை சம்பவமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்," என்று நேற்றிரவு அறிக்கை ஒன்றில் கூறினார்.


இந்த கொலை சம்பவம் குறித்த காரணத்தையும் குற்றத்தைப் புரிந்தவரையும் காவல் துறை வலை வீசி தேடிவருவதாக அவர் மேலும் சொன்னார்.


"பொது மக்கள் யாரேனும் இச்சம்பவம் குறித்த புதியத் தகவல்கள் பகிர விரும்பினால், ஒத்துழைப்பு தந்து காவல் துறைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொண்டார். - மலேசியாடுடே


Comments


bottom of page