குளியலறை கதவை உதைத்த அண்ணனுக்கு அரிவாள் வெட்டு
- S.KUMARA
- Nov 8, 2025
- 1 min read

மஞ்சோங் - குளியல் அறையின் கதவை எட்டி உதைத்ததால் ஆத்திரமடைந்த ஆடவர் தனது சொந்த அண்ணனையே அரிவாளால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த ருசீகர சம்பவம் இங்குள்ள ஆயர் தாவாரில் இருக்கும் அந்த இரு சகோதரர்களின் வீட்டில் வெள்ளியன்று நிகழ்ந்துள்ளது.
அச்சம்பவம் மதியம் 1.30 மணிக்கு நிகழ்ந்ததாக மஞ்சோங் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் உறுதிபடுத்தினார்.
பொதுமக்களிடம் இருந்து அந்த சகோதரர்கள் சண்டை குறித்து புகார் பெற்றதும் சம்பவம் இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.
"முதற்கட்ட விசாரணையில் 56 வயதுமிக்க அந்தா நபர் தலையில் அரிவாள் வெட்டினால் படுகாயத்து உள்ளாகி தற்போது மஞ்சோங் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"இதனை அடுத்து ஆயர் தாவார் காவல் நிலைய அதிகாரிகள் மதியம் 1.55 மணிக்கு 50 வயது ஆடவர் ஒருவரை கைது செய்துள்ளனர்," என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அவ்வாடவரிடம் மேற்கொண்ட சோதனையின் வழி, அண்ணனை வெட்ட பயன்படுத்தியதாக நம்பப்படும் பாராங்கத்தி ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றினர்.
மேற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர் தனது தம்பி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
"தமது மகள் குளியல் அறையினுள் இருக்கும் போது கதவை தனது அண்ணன் உதைத்ததால் ஆத்திரமடைந்து அந்த சந்தேகத்துக்குறிய நபர் சகோதரரரை பாராங்கத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளார்," என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.
"தற்போது அந்நபர் கைது செய்யப்பட்டு செக்ஷன் 326 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக," அவர் மேலும் சொன்னார்.





Comments