top of page

கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம்: மூன்று ஆடவர்கள் கைது

  • kumara885
  • Oct 31, 2025
  • 1 min read

செர்டாங் - இங்குள்ள புலூ வாட்டர் எஸ்டேட்டில் பெண் ஒருவர் ஆடையின்றி கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில்

சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக மூன்று ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.


அந்த மூன்று ஆடவர்கள் சுமார் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று செர்டாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் முகம்மது ஃபாரிட் அஹ்மட் உறுதிபடுத்தினார்.


"அம்மூவரும் மேற்கட்ட விசாரணைக்காக இன்று நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு பின்பு தடுப்புக் காவலில் வைக்கப்படுவர்.


“காவல் துறை கொலையின் உண்மைக் காரணத்தை அறிய விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளதாக சற்றுமுன்னர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.


செர்டாங் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அப்பெண்னின் சடலம் உடன்பிறந்த சகோதரரால் அடையாளம் உறுதிசெய்யப்படு பிரதேபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.


கடந்த புதன்கிழமையன்று சுமார் மதியம் 3.45 மணியளவில் அப்பெண்னின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சுற்றுவட்டாரங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது போலிசார் செக்‌ஷன் 302 கீழ் முதல் தவல் அறிக்கையை திறந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.


Comments


bottom of page