top of page

கிளந்தான் தலைமை பயிற்றுனர் இளவரசன் தற்காலிக ஓய்வில் வைக்கப்பட்டுள்ளார்

  • kumara885
  • Oct 17, 2025
  • 1 min read
இளவரசன்
இளவரசன்


கோலாலம்பூர் 16 அக்டோபர் - கிளந்தான் காற்பந்து அணியின் தலைமை பயிற்றுனர் இ.இளவரசன் தற்காலிக ஓய்வில் வைக்கப்பட்டுள்ளார் என்று சினார் ஹரியான் நாளேட்டின் நம்பத் தகுந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.


அண்மைய காலமாக கிளந்தான் அணி மலேசிய லீக் அரங்கில் அடைந்த தொடர் தோல்வி காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.


"தற்போது இளவரசனுக்குப் பதிலாக பினாங்கு காற்பந்து அணியின் முன்னாள் பயிற்றுனர் அக்மால் ரிசால் அகமது ரக்லியை மாற்று பயிற்றுனராக நியமிக்கப்பட்டுள்ளார்," என்று அவ்வட்டாரம் கூறியுள்ளது.


துணை பயிற்றுனர் ஜைருல் பித்ரி இஷாக் அக்மாலுக்கு உதவி புரிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னர் ஜைருல் பித்ரியும் அக்மால் ரிசாலும் கிளந்தான் குழுவிற்கு விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments


bottom of page