top of page

சபா தேர்தல் : இறுதி கட்டத்தில் நம்பிக்கை கூட்டணி-ஜிஆர்எஸ் தொகுதி பங்கீடு

  • kumara885
  • Oct 24, 2025
  • 1 min read

சபா தேர்தல் : இறுதி கட்டத்தில் நம்பிக்கை கூட்டணி-ஜிஆர்எஸ் தொகுதி பங்கீடு


புத்ராஜெயா- எதிர்வரும் சபா மாநில தேர்தல் தொடர்பாக ஹராப்பான் கூட்டணி-காபொங்கான் ராக்யாட் சபா கட்சியிடையே தொகுதி பங்கீடு குறித்த விவகாரம் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது.


அதே வேளையில் பாக்காத்தான் ஹராப்பான் தேசிய முன்னணி இடையே உள்ள தொகுதி பங்கீடு குறித்த பேச்சு முழுமை பெற்றுவிட்டதாக பாக்காத்தானின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.


"தேமு, பாக்காத்தான் இடையே தொகுதி பகிர்வு நிரைவுபெற்றது என்பதை நான் இங்கு உறுதிபடுத்துகிறேன்.


"ஆனால், பாக்காத்தான் கூட்டணி, சபா மக்கள் கூட்டணி இடையே உள்ள தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது, வெகு விரைவில் இதுகுறித்து முடிவு எட்டப்படும்,"என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.


Comments


bottom of page