சபா தேர்தல்: ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பாஸ் போட்டி
- S.KUMARA
- Nov 6, 2025
- 1 min read

கோத்தா பாரு - எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் பாஸ் கட்சி மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவிருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த அன்மையத் தகவலை அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ முகம்மது அமார் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
அக்கட்சியின் வேட்பாளர்களை உறுதி செய்யும் முறை தற்போது இறுதிகட்டத்தில் இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
"அடையாளம் காணப்பட்ட ஐந்து சட்டமன்றத்திலும் நாங்கள் இப்போது தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
“பாஸ் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரியவருகிறது அதில் ஒரு தொகுதி காராம்புனையாகும்.
"இந்தத் தொகுதியில், சபா மாநில பாஸ் ஆணையர் டத்தோ டாக்டர் அலிஅக்பர் குலாசான் போட்டியிடுவார் காரணம் அஃது வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கக்கூடிய தொகுதியாகும்," என்று தமது செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும், இதுவரை மெற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் வழி, பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணி மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடும்.
"ஆயினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் 11ஆம் தேதி தெரிவிக்கப்படும்.
"கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் பெரிக்காத்தான் நெஷனல் கொடியிலேயே போட்டியிடுவர்," என்றார் அவர்.
Ujarnya, kesemua calon akan bertanding menggunakan logo PN.





Comments