சபா தேர்தலில் 'இரவல்' வேட்பாளருக்கு வாய்ப்பில்லை
- S.KUMARA
- Nov 7, 2025
- 1 min read

குவாலா பென்யு - எதிர்வரும் நவம்பர் 29ஆம் நாளன்று நடைபெறவிருக்கும் சபா மாநில 17ஆம் சட்டமன்றத் தேர்தலையொட்டி 'இரவல்' வேட்பாளர் என்ற ஒன்று அரசியலில் இல்லை என்று ஜிஆர்எஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் நேற்று உறுதிபடுத்தினார்.
இந்த ஜிஆர்எஸ் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை மட்டுமே எதிர்வரும் பொதுத் தேர்தல் களத்தில் இறக்கும் என்று சூளுரைத்தார்.
"அரசியலில் வேட்பாளரை இரவல் வழங்குவது என்ற வழக்கம் இல்லை. நாங்கள் வெற்றி வாய்ப்புடைய வேட்பாளரை மட்டுமே நிறுத்துவோம். நிச்சயம் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உண்டு,' என்று அவர் மேலும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதர அரசியல் கட்சிகள் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை இரவல் வாங்கி தொகுதிகளில் களம் இறக்கி வெற்றியைக் குறிவைப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
அதுமட்டுமின்றி, குவாலா பென்யு சட்டமன்றத்தொகுதியில் அதன் நடப்பு உறுப்பினர் டத்தோ லிமூஸ் ஜூரி அத்தொகுதியைத் தற்காத்துக்கொள்ள இம்முறை மீண்டும் களத்தில் நிறுத்தப்படுவார் என்று ஹஜிஜி அதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
"சற்று முன்னர் நான் அதற்கான அறிகுறியைத் தந்துவிட்டேன்...(வேட்பாளர்)உறுதியானது.
"இம்முறை, சட்டமன்றத் தேர்தலிலும், குவால பென்யு எங்களின் ஜிஆர்எஸ்
கூட்டணியின் வசமே இருக்கும் என்பது தின்னம், இதில் மாற்று கறுத்து கிடையாது," என்று மேலும் கூறினார்.





Comments