சபா தேர்தல்: 10 தொகுதிகளில் பிகேஆர் போட்டி - அன்வார்
- S.KUMARA
- Nov 10, 2025
- 1 min read

கோத்தா கினாபாலு - எதிர்வரும் சபா மாநிலத்தின் 17ஆவது சட்டமன்றத் தேர்தலில் மத்திய ஆளும் கட்சியான மக்கள் நீதி கட்சி (பிகேஆர்) மொத்தம் 10 தொகுதிகளில் களம் காண்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பை கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நெற்றிரவு இங்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்த போட்டியிடும் 10 தொகுதிகளில், முன்னாள் மாநில முதல்வரும் நடப்பு மாநில ஆளுநருமான துன் மூசா அமானின் புதல்வருமாகிய டத்தோ யாமானி ஹஃபீஸ் மூசாவும் ஒருவாராவார்.
அவ்வகையே, இனானாம் சட்டமன்றம், ஆப்பி-ஆப்பி, மெரொதாய், மெலாலாப், சின்டுமீன், தூலிட், கம்-கம், காராமுன்திங், செகாமா மற்றும் பெதாகாஸ் ஆகியவை பிகேஆர் போட்டியிடவிருக்கும் தொகுதிகளாகும்.
"தூலிட் சட்டமன்றத்தில் பெண் வேட்பாளரான டத்தின் ருஃபினா பெங்கெரானை நிறுத்தியுள்ளோம்.
"பெதாகாஸ் தொகுதியில் சட்ட மேதை அவாங் ஹுசைனி சாஹாரியை களம் இறக்கியுள்ளோம். undang-undang iaitu bagi DUN Petagas, Awang Husaini Sahari.
"முன்னாள் இரண்டாம் துணை நிதி அமைச்சரான டத்தோ யஸ்மானி ஹஃபிஸ் மூசா (ஆளுநர் மூசா ஆமான் புதல்வர்) சின்டுமீன் தொகுதியில் களம் காண்கிறார்," என்று மேலும் சொன்னார்.





Comments