சபா மாநில தேர்தலின் தேமு வேட்பாளர்கள் உறுதியானது
- kumara885
- Nov 4, 2025
- 1 min read

புத்ராஜெயா - தேசிய முன்னணி சபா மாநில சட்டமன்றத் தேரிதலில் போட்டியிட விருக்கும் சிறந்த வேட்பாளர்களை உறுதிசெய்து விட்டது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதர் தெரிவித்தார்.
சபா தேசிய முன்னணியுடனான பேச்சுவார்த்தை உட்பட கட்சி அளவில் தேர்தலைச் சந்திப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேசிய முன்னணி செய்து முடித்துவிட்டதாக அவர் மேலும் உறுதிபடுத்தினார்.
"தேமு அளவில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதென்று நான் இங்கே உறுதியாக சொல்ல முடியும்..
"தற்போது வேட்பாளர்களின் பெயர்கள் அறிப்பிற்காக அனைவரும் காத்திருக்கிறோம்.
"அல்லாவின் ஆசியுடன் தேசிய முன்னணியின் தலைவர் (அஹ்மட் ஜாஹிட்) சரியான நேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்பார்," என்று மேலும் சொன்னார்.
இதற்கு முன், வேட்பாளர் பதிவு நாட்களுக்கு ஒரு வாரம் முன்பாகவே தேமுவின் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவர் என்று ஜாஹிட் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமு அனைத்து 73 சட்டபன்றத் தொகுதிகளிலும் போட்டியிடாது என்றும் முக்கியமான வெற்றிவாய்ப்புடைய தொகுதிகளை குறிவைத்து போட்டியிடும் என்றும் அவர் சோன்னார்.
சபா மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த அக்டோபர் அன்று களைக்கப்பட்டதை அடுத்து எதிர்வரும் 29 ஆம் திகதி அங்கு தேர்தல் நடைபெறும் என்று மலேசிய தேர்தல் ஆனையம் அன்மையில் அறிவித்தது.





Comments