top of page

செம்பனைத் தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம்

  • kumara885
  • Nov 5, 2025
  • 1 min read
அழுகிய நிலையில் பெண் சடலம்
அழுகிய நிலையில் பெண் சடலம்

குவந்தான் - நேற்று இங்குள்ள ஜாலான் காராக்-குவாலா பிலா, பத்து 19இல் இருக்கும் செம்பனைத் தோட்டத்தினுள் பெண்ணின் சடலமொன்று இலைகளின் குவியலில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


காவல் துறை இச்சம்பவம் குறித்து மாலை 5 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து தகவல் பெற்றதாக, பஹாங் மாநில காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோஶ்ரீ யாஹயா ஒஸ்மான் உறுதிபடுத்தினார்.


"சம்பவம் இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அச்சடலம் ஒரு பெண் என்றும் ஆனால் அவரது உண்மை அடையாளங்கள் இன்னும் தெரியப்படவில்லை என்று தமது அறிக்கையில் கூறினார்.


இதனிடையே, கே9 மோப்ப நாய் உதவியும், பஹாங் மாநில குற்றவியல் காவல் பிரிவு அதிகாரிகளும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


"இறந்த பெண்ணுக்குச் சொந்தமானதென நம்பப்படும் சில பொருட்களும் கண்டெடுக்கப்படுள்ளது.


"அவற்றில் அப்பெண் அணிந்திருந்த பச்சை நிற விளையாட்டு கால்சட்டையும், கேசியோரக கைக் கடிகாரம், கருப்பு நிர செருப்பு மற்றும் கருப்பு நிற ஆடையும் மீட்கப்பட்டது.


"இந்த அனைத்து பொருட்களும் விசாரணைக்கு ஈடுபடுத்தப்படும்," என்று அவர் மேலும் சூளுரைத்தார்.


அப்பெண்ணின் சடலம் தற்போது சவப் பரிசோதனைக்காக பஹாங் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது இச்சம்பவத்தை திடீர் மரணம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.


Comments


bottom of page