செம்பனை மரத்தில் கார் மோதி ராணுவ வீரர்,மாணவன் கருகி மரணம்
- kumara885
- Oct 24, 2025
- 1 min read

செம்பனை மரத்தில் கார் மோதி ராணுவ வீரர்,மாணவன் கருகி மரணம்
கோத்தா திங்கி - தொயோத்தா வியோஸ் ரக கார் ஒன்று செம்பனை மரத்தில் மோதி தீப்பிடித்ததில் இருவர் கருகி மாண்டனர்.
இந்த கோர விபத்து நேற்று அதிகாலை கிலோமீட்டர் 32,ஜாலான் தஞ்சோங் பாலாவ்-செடிலி சாலையில் நிகழ்ந்துள்ளது.
மரணம் அடைந்த இருவரும் 21 வயது முன்னாள் ராணுவ வீரர் முகம்மது டேனியல் சபெரி மற்றும் பயணியான செமென்சு இடைநிலைப்பள்ளி மாணவியான 17வயது ஐஸா நூர் இஷ சப்ரி என்று அடையாளம் கண்டுள்ளதாக கோத்தா திங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பரின்தெண்டன் யூசோப் ஒஸ்மான் உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான முகம்மதுடேனியலிலும் பள்ளி மாணவியின் உடல் முழுவதுமாக தீயில் எரிந்ததால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்," என்று அறிக்கை ஒன்றில் கூறினார்.
சம்பவத்தின் போது முன்னாள் ராணுவ வீரர் ஒட்டிவந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து செம்பனைத் தோட்டத்திலுள்ள மரத்தில் மோதி தீப்பற்றியது.
இதனால். இருவரும் சம்பவ தளத்திலேயே கருகி மாண்ட வேளையில் பிரேத உடற்கூறியல் ஆய்வுக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
சம்பவம் நடந்த காரணம் குறித்து போலிசார் தற்போது விசாரணையை முடக்கிவிட்டுள்ளனர்.





Comments