top of page

ஜோகூர், கிள்ளான் பள்ளத்தாக்கில் மின்சாரத் தடை நீங்கியது

  • kumara885
  • Oct 15, 2025
  • 1 min read


மலாக்கா, அக்டோபர் 15- சற்றுமுன் மாலை நேரம் 5.54 மணிக்கு இங்குள்ள பெஞ்சானா பேபாஸ் நிலையம் எட்ரா பவர் பிலானில் ஏற்பட்ட மின்சார வினியோகத் தடை சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது.


இந்தத் தகவலை தேசிய மின்சார வாரியமான தெனாகா நெஷனல் பெர்ஹாட் சற்றுமுன் தனது முகநூலில் உறுதிப்படுத்தியது.


மேலும் அவ்வாரியம் அனைத்து பயனீட்டாளர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதுடன் ஏற்பட்ட மின்சாரத் தடங்களுக்காக வருத்தத்தையும் கூறிக்கொண்டது.


இசம்பவத்தினால் மலாக்காவில் உள்ள பெஞ்சானா பேபாஸ் நிலையத்தில் ஏற்பட்ட மின்சாரக் கோளாரினால் கிள்ளான் பள்ளத்தாக்கு ,ஜோகூர் ஆகிய பகுதிகளில் மின்சாரத் தடை உண்டானது குறிப்பிடத்தக்கது.


Comments


bottom of page