top of page

டிசம்பர் 2 தெங்கு ஜஃப்ரூள் அமைச்சராக பணியாற்றும் இறுதி நாள்

  • S.KUMARA
  • Nov 13, 2025
  • 1 min read


கோலாலம்பூர்- எதிர்வரும் டிசம்பர் 2 தேதி தாம் முதலீட்டு, வாணிப, தொழில்துறை அமைச்சராக பதவி வகிக்கும் இறுதி நாள் என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிபடுத்தினார்.


இந்த பிரிவு தமக்கு கொஞ்சம் மன வேதனையை அளிப்பதாகவும் ஆனல் அஃது தவிர்க்க முடியாத ஒன்றென்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


“இந்த மாற்றம் சற்று மன வருத்தத்தைத் தந்தாலும், சட்ட விதிப்படி ஒரு அமைச்சர் கடமையாற்றுவதற்கு மக்களவையில் இருக்க வேண்டியது அவசியம்.


“அவ்வகையில், எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு நான் அந்த கடமையைத் தொடர இயலாது," என்று கூறினார்.


இதனிடையே, தாம் காலி செய்ய விருக்கும் அமைச்சர் பதவியை நிரப்பும் முடிவு பிரதமரும் அவரது அரசாங்க நிர்வாகத்தின் கடமையாகும்.


"அதேவேளையில் இந்த அமைச்சர் மாற்றம் சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது எனது தார்மீகக் கடமையாகும்." என்று அவர் மேலும் சூளுரைத்தார்.


Comments


bottom of page