top of page

தேமு-பாக்காத்தான் தொகுதி பகிர்வு 70 விழுக்காடு முடிவுற்றது - புங் மொக்தார்

  • kumara885
  • Nov 2, 2025
  • 1 min read

தேமு-பாக்காத்தான் தொகுதி பகிர்வு 70 விழுக்காடு முடிவுற்றது - புங் மொக்தார்


சண்டாகான் - தேசிய முன்னணி-பாக்காத்தான் ஹராப்பான் இடையே தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தைகள் தற்போது 70 விழுக்காடு நிறைவுற்றதாக சபா தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ புங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.


இன்னும் ஒரு சில தொகுதிகள் பகிர்வு குறித்து இரு தரப்பும் தீர்க்கமாக உடன்படிக்கை கண்ட பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படும் என்றார் அவர்.


" இந்த விவகாரம் எதிர்வரும் நவம்பர் 3 அல்லது 4இல் உறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,என்றார்.


இரு தரப்பும் ஒரே தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டியதால், தொகுதிகள் பகிர்வு குறித்த முடிவில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


இம்முறை தேசிய முன்னணி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும் என மேலும் கூறினார்.


இதற்கு முன் சபா தேசிய முன்னணி 48 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட எண்ணம் கொண்டிருந்தது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.


Comments


bottom of page