தாயையும் பெண்ணும் கொலையுண்ட சம்பவத்தில் மேலும் 3 அந்நியர்கள் கைது
- kumara885
- Oct 25, 2025
- 1 min read

தாயையும் பெண்ணும் கொலையுண்ட சம்பவத்தில்மேலும் 3 அந்நியர்கள் கைது
புக்கிட் மெர்தாஜாம் - கடந்த வாரம் சனியன்று இங்குள்ள கம்போங் செகொலா ஜூருவில் தாயும் மகளும் கொலையுண்ட சம்பவத்தில் மேலும் முன்று அந்நிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பினாங்கு மாநில போலிஸ் படைத் தலைவர் டத்தோ அஜிஜி இஸ்மாயில் இத்தகவலை உறுதி செய்தார்.
அந்த மூன்று நபர்களும் வெள்ளியன்று பிடிபட்டதாகவும் இன்று சனிக்கிழமை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
" தாயும் மகளும் கொலையுண்ட சம்பவத்தில் தற்போது மூன்று அந்நியர்கள் கைதாகியுள்ளனர்.
"அவர்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாவர். ஒருவரையொருவர் அறிமுகமான இம்மூவரும் சம்பவத்திற்குப் பிறகு தப்பி ஓடியுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கு முன் தடுப்புக்காவலில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இறந்த அம்மாதுவின் கணவன் போலிஸ் உத்திரவாதத்துடன் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று மேலும் கூறினார்.





Comments