நிருபரே என்னை மன்னித்துவிடவும் - ஙா கோர் மிங்
- kumara885
- Nov 4, 2025
- 1 min read

ஈப்போ - நிருபரின் புன்படுத்தும்படி அறிக்கை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் இறுதியில் சம்பந்தப்பட்ட உத்துசான் மலேசியா நிருபரிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கேட்டார்.
"பத்திரிக்கை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க்கும் மக்கள் பிரதிநிதியான நான் ஆலோசனையை ஏற்று பாடமாக எடுத்துக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
"நான் அனைத்து கண்டிப்பையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஊடக நண்பர்கள் யாரேனும் மனது புண்பட்டிருந்தால் நான் மனதார மண்ணிப்பு கோருகிறேன்," என்றார்.
மேலும், நாம் அனைவரும் ஒற்றுமையாக நாட்டை வளர்ச்சியான பாதைக்கு கொண்டுசெல்ல பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இங்குள்ள தாமான் பூன் பாக்கில் மடானி விளையாட்டுத் திடலை திறந்து வைத்தபின் மேற்கண்டவறு கூறினார்.
கடந்த 30 ஆண்டுகாலமாக அரசியலில் செயல்பட்டுவரும் அவர் ஊடகவியளாலர்களை மதிப்போடு நடத்துவதாகவும், மக்களிடம் அரசாங்கத்தின் தகவல்கலைக் கொண்டு சேர்ப்பதில் அவர்களது அளப்பரிய சேவையையும் தாம் பாராட்டுவதாகச் சொன்னார்.
"என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும் நான் ஊடக நண்பர்களை போற்றுபவன் என்று.
"ஆகவே, இந்த விவகாரத்தை பெரிதாக்காமல் நாம் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக நாட்டின் மேம்பாட்டிற்காக பாடுபடுவோம், என்றார்
பத்திரிக்கையாளரின் கேள்விக்கு அவமதிக்கும் வகையில் ஊடக நண்பரை பேசியதாக ஙா காண்டனத்துக்கு உள்ளானார்.
இதற்கு முன் இச்சம்பவம்ம் தொடர்பாக தேசிய பத்திரிக்கையாளர் சங்கமும் கெராக்கான் மிடியா மெர்டேக்காவும் அறிக்கை ஒன்றின் வழி ஙா வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





Comments