top of page

பராமரிப்பற்ற நாய்கள் விவகாரத்தில் புத்ரா பல்கலைக்கழகம் வருத்தம்

  • kumara885
  • Oct 14, 2025
  • 1 min read

Updated: Oct 15, 2025



சேர்டாங், அக்டோபர் 14 – மலேசிய புத்ரா பல்கலைக்கழக (UPM) வளாகத்தில் நடந்த பராமரிப்பற்ற சாலையோர நாய்கள் கையாளப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் தங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.


இச்சம்பவம் சமுக ஊடகங்களில் பரவியதோடு மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தையும் எழுப்பியது.


இன்று வெளியிட்ட அறிக்கையில் அப்பல்கலைக்கழக நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பாக தமது ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளது.


"கடந்த ஆண்டு இறுதியில் பல்கலைக்கழக வளாகப் பகுதியில் சுற்றித் திரிந்த பராமரிப்பற்ற நாய்கள் கையாளப்பட்ட விவகாரத்தை பல்கலைக்கழகம் மிகுந்த முக்கியத்துடன் எடுத்துக்கொள்கிறது.


“அந்த நாய்கள் கையாளப்பட்ட சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.


“விலங்குகள் நலனுக்கான சமூக அக்கறையை பல்கலைக்கழகம் மதிக்கிறது மேலும் அனைத்து வன விலங்குகள் மேலாண்மை நடவடிக்கைகளும் ஒழுக்கத்துடனும், நெறிமுறையுடனும், நடப்பு விதிமுறைகளைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படும் என்பதை உறுதி செய்கிறது,” என யூபிஎம் அந்த அறிக்கையில் உறுதி அளித்தது.


Comments


bottom of page