top of page

போதைப் பொருள் கும்பலின் தற்போதைய இலக்கு மாணவர்கள்

kumara885
Oct 29, 2025
1 min read

போதைப் பொருள் கும்பலின் தற்போதைய இலக்கு மாணவர்கள் -இந்தோனேசிய போதை துடைத்தொழிப்பு எச்சரிக்கை


ஜக்கார்த்தா - போதைப் பொருள் கடத்தல் கும்பல் தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்துள்ளதாக இந்தோனேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு நிறுவனம் எச்சரிக்கை எழுப்பியுள்ளது.


இப்பொது பாரம்பரிய முறையில் போதைப்பொரு கடத்தப்படுவதில்லை மாறாக அது மிட்டாய் குளிர்பானம் உட்பட மின்னியல் வென்சுருட்டு வடிவில் தயாரிக்கப்படுவதாக அதன் தலைவர் உயர் ஆணையர் ஜெனரல் சுயூடி அரியோ செதோ கூறினார்.


இவர் மாணவர்களிடம் ஜக்கார்த்தாவில் தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு முகாமில் மேற்கண்டவாறு பேசினார்.


"ஒருமுறை நீங்கள் போதைப்பொருளை பயன்படுத்தினாலும் அதற்கு அடிமையாகுவீர்கள், நாளடைவில் இது உங்கள் மூலையை நாசமாக்கி உடலை உருகுலையச் செய்து உயிர் போகும்," என்றார்.


"இந்நாட்டின் இளைஞர்களாகிய மாணவச் செல்வங்கள் அனைவரும் நமது நாட்டை போதைப்பொருள்களில் இருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டும்.


"உங்கள் அர்ப்பணிப்பு நாட்டை சுபிட்சமான பாதைக்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி," என்று அவர் சூளுரைத்தார்.


Comments


bottom of page