பெர்லிஸ் பெரிக்காத்தான் கூட்டணி தலைவராக ஷஹிடான் காசிம் நியமனம்
- kumara885
- Oct 28, 2025
- 1 min read

கங்கார் - பெர்லிஸ் மாநில பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணி புதிய தலைவராக ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஷாஹிடான் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் பெர்லிஸ் மந்திரி புசார் அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய மாநில தலைவர் நியமனத்தை மந்திரி புசார் முகம்மது ஷுக்ரி ரம்லி மனதார வரவேற்றார்.
நேற்று நடைபெற்ற உச்சமன்ற கூட்டத்தில் பெரிக்காத்தான் நெஷனலின் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையேற்று இந்த நியமனங்களை தீர்மானித்தார்.
முன்னாள் மாநில அம்னோ பொதுத்தொடர்புத் தலைவருமான ஷாஹிடான் நியமனம் மாநில பெரிக்காத்தான் கூட்டணியை இன்னும் வலுவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.





Comments