top of page

மனிதர்களைக் கடத்தும் கும்பல் கைது,40 இந்தோனேசியப் பெண்கள் காப்பாற்றப்பட்டனர்

  • kumara885
  • Oct 25, 2025
  • 1 min read

மனிதர்களைக் கடத்தும் கும்பல் கைது,40 இந்தோனேசியப் பெண்கள் காப்பாற்றப்பட்டனர்.


பெட்டாலிங் ஜெயா- அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தை வைத்து மனித கடத்தலில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை குடிநுழைவுத் துறை முரியடித்துள்ளது.


இந்தச் சிறப்பு நடவடிக்கையின் மூலம் குடிநுழைவுத் துறை 40 இந்தோனேசியப் பெண்களை அக்கும்பலிடமிருந்து காப்பாற்றியுள்ளதாக அதன் தலைமை இயக்குனர் டத்தோ ஜக்காரியா ஷாபன் கூறினார்.


மேலும் இந்த கடத்தல் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஓர் உள்ளூர் பெண்மணி, மூன்று இந்தோனேசியர்கள என நால்வர் கைது செய்யப்பட்டனர்.


குடிநுழைவுத் துறையால் காப்பாற்றப்பட்ட அனைத்து பெண்களும் 21 முதல் 51 வயதுமிக்கவர்கள்.


பாதிக்கப்பட்ட பென்கள் அனைவரும் மலேசியாவில் 1 முதல் ஏழு ஆண்டுகளாக இருந்துள்ளதாக விசாரணையின் வழி தெரியவந்துள்ள்து.


இந்த ஆள்கடத்தல் கும்பல் அதிக ஊதியமுடைய வேலை வாங்கித் தருவதாகக் கூறி மலேசியாவிற்குக் கொண்டுவரப்பட்டு அக்கும்பலால் ஏற்பாடு செய்யப்பட்ட வீடுகளில் தங்கவைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.


" பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் வலுக்கட்டாயமாக அன்றாடம் ஊதியமின்றி வீட்டுப்பணிப்பெண் வேலையைச் செய்ய கட்டாயப்படுத்தபட்டதாகவும் தெரியவந்துள்ளது.


அதுமட்டுமின்றி அக்கும்பல் அப்பெண்களின் கடப்பிதழை வைத்துக்கொண்டு அவர்கள் தப்பி ஓடாமல் இருக்க வேலை நேரம் முடிந்ததும் இக்கும்பல் அவர்களை அழைத்துச் சென்றுவிடும் என்றும் தெரியவந்துள்ளது.


Comments


bottom of page