முகைதினை நெருங்குவது கடினம், உறுப்பினர்கள் ஹம்சாவின் பக்கம்
- kumara885
- Nov 1, 2025
- 1 min read

ஷஆலாம்- பெர்சத்து கட்சித் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசினஇ அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியாது, என்று மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் கமால் தெரிவித்தார்.
அந்த பெரிக்காத்தான் நெஷனல் தலைவரின் இப்படிப்பட்ட குணத்தால் கட்சியின் அடிமட்ட தொண்டர்களும் தலைவர்களும் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் பக்கம் மகிழ்ச்சியாக சுலலபமாக அணுக முடிகிறது.
"கட்சியினுள் யாரும் பாகோ நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான முகைதீனை வெறுக்கவில்லை.
"அவருக்கு (முகைதீன்) நாட்டிலுள்ள கட்சித் தொகுதி தலைவர்கள் யாரையும் தெரியாது.ஆனால் ஹம்சா அப்படியல்ல. இதை நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஒருவேளை முகைதீனுக்கும் ஹம்சாவுக்கும் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி நிலவினால், முகைதீன் கண்டிப்பாக தோற்றுப்போவார்.
"இதற்கு முக்கியக் காரணம் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களும் தலைவர்களும் ஹம்சாவின் பக்கம்.
"எப்போதும் கட்சி விவகாரம் என்று வந்தால் தொகுதியை, பெரிக்காத்தான் நெஷனலை கவப்பதற்கான செலவுகள், எங்களை வழிநடத்திச் செல்வதிலும் அவர் பணம், நேரம், அனுக்கமான நட்பிலும் எந்த குறையும் வைக்கவில்லை, அவ்வளவு அணுக்கமான நட்பை உறுவாக்கியுள்ளார் திரு ஹம்சா அவர்கள்.
"அதனால்தான், பெர்சத்து கட்சியில் ஹம்சா உண்மையான தலைவராகத் திகழ்கின்றார் என்று சினார் ஹரியானுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றில் கூறினார்.
கடந்த அக்டோபர் 14ஆம் நாளன்று, பெர்சத்து கட்டொழுங்கு பிரிவு வான் ஃபைசாலை கட்சி உறுப்பினர் தகுதியை இடைக்கால நீக்கம் செய்துள்ளது.





Comments