top of page

மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டும்- பெர்சத்து

  • kumara885
  • Oct 31, 2025
  • 1 min read


கோத்தா பாரு- மாச்சாங் தொகுதி பெர்சத்து கட்சி, மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினரான வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மட் கமாலை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.


கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக தப்பான அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் வான் அஹ்மாட் ஃபைசால் கட்சியிலிருந்து உடனடியாக தூக்கி எரியப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.


தேவையில்லாத அறிக்கைகளை வெளியிட்டு மக்களைக் குழப்பி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வான் அஹ்மாட் ஃபைசாலின் செயல் கண்டனத்துக்குரியது என்று விமர்சிக்கப்படுகிறது.


“கட்சியின் கட்டொழுங்கு பிரிபு வான் அஹ்மாட் ஃபைசாலை உடனடியாக நீக்கவேண்டும், கட்சியின் மான்பும் சுபிட்சமும் நிலைபெற இந்நடவடிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்," என்று மாச்சாங் பெர்சத்து தொகுதி இன்று அறிக்கையில் கேட்டுகொண்டுள்ளது.


“தற்போது இடைக்கால நீக்கத்தில் இருந்துவரும் வான் அஹ்மாட் ஃபைசால் தொடர்ந்து தயக்கமில்லாமல் கட்சியின் தேசியத் தலைவர் மீது அவதூறுகளைப் பரப்பி வருவதாக மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.


தேசிய தலைவருக்கு எதிராக செயல்படும் வான் அஹ்மாட் ஃபைசாலின் குணம் அருவருப்பான செயல் மட்டுமில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முகைதீன் யாசின் மீது அடுக்கப்படுகின்றது.


வான் அஹ்மாட் ஃபைசாலின் இந்த செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றால் அவரை கட்சி உறுப்பியத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும்.


Comments


bottom of page