top of page

மீண்டும் விமான நிலைய ஏரோடிரேன் கோளாரை விசாரிக்க ஆணை

  • kumara885
  • Oct 29, 2025
  • 1 min read
மீண்டும் விமான நிலைய ஏரோடிரேன் கோளாரை விசாரிக்க ஆணை
மீண்டும் விமான நிலைய ஏரோடிரேன் கோளாரை விசாரிக்க ஆணை

மீண்டும் விமான நிலைய ஏரோடிரேன் கோளாரை விசாரிக்க ஆணை


செப்பாங் - இன்று அதிகாலை வேளையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஈடுபட்ட புதிய பயணிகள் ஏரோடிரேன் மீண்டும் கோளாறு ஏற்பட்டு நின்றதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

சிறார்கள் உட்பட அதில் பிரயாணம் செய்த அனைவரும் அதன் ஓடுபாதையில் நடந்து விமான நிலையத்திற்குள் வந்தடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவத்தில் அதிருப்தியான போக்குவரத்து அமைச்சு மலேசிய விமான நிலையக் குழுமத்தின் மீது உடனடியாக தீவிர விசாரணை ஒன்றை மேற்கொள்ளும்படி ஆப்பாட் எனும் தரை பொது போக்குவரத்து இலாகாவிற்கு ஆணையிட்டுள்ளது.


இந்த ஏரோடிரேன் இப்போதுதான் சில மாதங்களுக்கு முன்பு அதன் சேவையைத் தொடங்கியதை அடுத்து தொடர் கோளாறுகள் இன்று வரை ஏற்பட்டு பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதால் போக்குவரத்து அமைச்சு அக்குழுமத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.


"இதற்கு முன் அந்த இரயில் முதல் கட்ட சேவையில் ஈடுபட்டபோது அதற்கு கூடுதல் அவகாசம் தேவை என்று அமைச்சு அறிந்துக்கொண்டது.


"ஆனால், சேவை தொடங்கப்பட்டு சில மாதங்களிலேயே ஏற்பட்ட தொடர் கோளாறினால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தமதறிக்கையில் இன்று கூறினார்.


இதனிடையே மலேசிய விமானக் குழுமத்துக்கு வழங்கப்பட்ட உரிமையாளர் லைசன்ஸ் விதிமுறையின்படி அந்நிறுவனம் பயணிகளுக்கு ஏரோடிரேன் சேவையை திருப்தியளிக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்வது கட்டாயம் ஆகும்.


2010 தரை பொதுப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் லைசன்ஸ் விதிமுறைகளை மீறுவோர் மீது ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா ரிம250,000 விதிக்க வகை செய்யும் என்று அவர் நினைவுறுத்தினார்.




Comments


bottom of page