யார் உண்மையான பாசம் உள்ளவர்கள் என்று அறிய பிணமாக நடித்த தாத்தா
- kumara885
- Oct 21, 2025
- 1 min read

யார் உண்மையான பாசம் உள்ளவர்கள் என்று அறிய பிணமாக நடித்த தாத்தா
புது டில்லி - தன் மீது யார் உண்மையான பாசம் கொண்டு யார் தன் இறப்பு அடக்கத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிந்துக்கொள்ள இறந்தது போல் நடித்து முதியவர் ஓருவர் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த ருசீகர சம்பவம் பீஹார் மாநிலத்திலுள்ள கொன்சி எனும் கிராமத்தில் நடந்தேறியது.
மோகன் லால் எனும் 74 வயது அம்முதியவரின் உடல் தகனம் செய்வதற்காக தெரு வழியே எடுத்துச் செல்லும் போது அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மோகன் லாலின் செயலற்ற உடலைக் கண்டு சற்று குழப்பம் அடைந்தாலும் காலம் தாமதிக்காமல் உடனடியாக அவர்களும் பிணத்தின் இறுதி ஊர்வலத்தில் களந்துகொண்டனர்.
அப்போதுதான் மோகன் லால் உடனே கண் விழித்து சவப்பெட்டியிலிருந்து எழுந்து அமர்ந்தவுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
" இறந்ததுபோல் நடித்ததும். மக்கள் திரளாக வந்து என் சவப்பெட்டியைத் தூக்கிச் சென்றனர்.ஆனால் அவர்கள் என்மீது எந்த அளவுக்கு அன்பும் பாசமும் வைத்துள்ளனர் என்பதைத் தெரிந்துக்கொள்ளத்தான் இவ்வாறு நடித்தேன்.
" உண்மையில் இவர்கள் என்மீது வைத்துள்ள அன்பு மெய்சிலிர்க்கவைக்கின்றது,"என்றார்.
நன்றிக்கடனாக மோகன் லால் மக்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து மன்னிப்பு கோரியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments