ரோன்95 விலை மாற்றம் இல்லை, ரோன்97 6 காசு ஏற்றம்
- kumara885
- Oct 31, 2025
- 1 min read

கோலாலம்பூர்- இன்று நிதி அமைச்சு ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் ஆகிய எரிபொருளின் வாராந்திர விலை நிர்ணயத்தை அறிவித்துள்ளது.
அவ்வகையில் ரோன்97 பெட்ரோல், டீசல் எண்ணையின் விலை ஆறு காசு உயர்த்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு இங்கு புத்ராஜெயாவில் வெளியிட்ட அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.
இந்த புதிய விலையின் மூலம் ரோன்97 பெட்ரோல் லிட்டருக்கு RM3.20க்கும், டீசல் லிட்டருக்கு RM2.95க்கும் விற்பனை செய்யப்படும்.
இதனிடையே மானியமில்லாத RON95 பெட்ரோலின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத நிலையில் லிட்டருக்கு RM2.60 என்று தொடரும்.
BUDI95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 என்ற விலையில் நிலைநிருத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சபா, சரவாக் மற்றும் லாபுவான் மாநிலங்களில் டீசலின் சில்லறை விலை எந்த ஒரு மாற்றமுமின்றி லிட்டருக்கு ரிம2.15 என தொடர்ந்து நிலைக்கும்.
இந்த புதிய விலை நாளை அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை பயனீட்டாளர் அமலாக்கத்தில் இருக்கும்.
உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை விலை போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





Comments