top of page

லஞ்சம் வாங்கியதாக முன்னாள் இராணுவ வீரர் கைது

  • kumara885
  • Oct 13, 2025
  • 1 min read
லஞ்சம் வாங்கியதாக முன்னாள் இராணுவ வீரர் பினாங்கில் கைது
லஞ்சம் வாங்கியதாக முன்னாள் இராணுவ வீரர் பினாங்கில் கைது

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 13 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) பினாங்கு கிளை இன்று ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியை, ஒரு நிறுவன உரிமையாளரிடமிருந்து ரூ.405,000 (மலேசிய ரிங்கிட்) அளவிலான லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.


நம்பத் தகுந்த வட்டார தகவலின் படி அந்த லஞ்சத் தொகை மலேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் (PVATM) சொத்துகளை சந்தை மதிப்பை விட குறைந்த விலையில் விற்க ஒப்புக்கொண்டதற்கான பரிசாக வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.


அறுபது வயதிற்கும் மேற்பட்ட அந்த உள்ளூர் நபர் திங்கள்கிழமை காலை 10 மணியளவில், பினாங்கு MACC அலுவலகத்தில் விசாரணைக்காக வருகை தந்தபோது கைது செய்யப்பட்டார்.


முதல் நிலை விசாரணையில், இச்சம்பவம் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்தது எனவும், அப்போது சந்தேகத்துக்குரிய அந்நபர் PVATM அமைப்பில் தகவல் தலைவராக (Ketua Penerangan) பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.


“மேலும், அந்நபர் PVATM அமைப்பின் ஐந்து அடுக்குமாடி குடியிருப்பு யூனிட்களை விற்றதில் இருந்து சுமார் RM405,000 அளவிலான லஞ்சத் தொகையை பெற்றதாக நம்பப்படுகிறது.


“அவர் அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணமாற்று (bank transfer) வழியாக பெற்றதாகவும்,இதுவரை மொத்தம் 12 பண பரிமாற்றங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இதற்கிடையில், பினாங்கு MACC இயக்குநர் டத்தோ எஸ். காருணாநிதி, அந்த முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதை ஊடகத்திடம் உறுதிப்படுத்தினார்.


அவர் மேலும் கூறியதாவது, இந்த வழக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 (செக்‌ஷன் 16(a)(A)) பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.


அந்த சந்தேகத்திற்குரிய நபர் எதிர்வரும் புதன்கிழமையன்று பட்டர்வெர்த் சிறப்பு செஷன் ஊழல் நீதிமன்றத்தில் (Mahkamah Sesyen Khas Rasuah Butterworth) குற்றஞ்சாட்டப்படவுள்ளார்.


Comments


bottom of page