லியாங் மலையில் மாயமான மலையேரி இறந்த நிலையில் கண்டுபிடிப்பு
- kumara885
- Oct 17, 2025
- 1 min read

ஈப்போ, அக்டோபர் 17- கடந்த இருநாட்களுக்கு முன் 10 பேர் கொண்ட குழுவுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு மாயமான ஆடவர் ஒருவர் இறுதியில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இறந்த அந்நபர் சுங்கைப்பட்டானியைச் சேர்ந்த 34 வயதுடைய முஸ்தாகிம் மன்சூர் என்று அடையாளம் உறுதியானது என்றும் தீயணைப்பு வீரர்கள் பிணத்தை லியாங் பாராட் மலை உச்சியில் கண்டதாக பேராக் மாநில தீயணைப்புத் துறை தற்காலிக உதவி இயக்குனர் ஷாஸ்லின் முகமது ஹனாபியா தெரிவித்தார்.
இறந்த அந்த மலையேறி கடந்த அக்டோபர் 10ஆம் நாள் இதர 10 நண்பர்களுடன் புக்கிட் பிரேசரிலிருந்து மலையேறியாதாக நம்பப்படுகிறது.
அவ்வகையில் அவர்கள் திட்டமிட்டபடி கூனொங் லியாங்கில் இறங்கி இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் இறுதியாக கடந்த செவ்வாயன்று இரவு 10.30 மணியளவில் லியாங் பாராட் மலை உச்சியில் கால் வலியுடன் மெல்ல நடந்து சென்றதைக் கண்டதாகத் தெரிய வந்துள்ளது.
சுமார் 22 மீட்புப் பணி வீரர்கள் அடங்கிய குழு காணாமற்போன மலையேறியை கண்டுபிடிக்கும் தீவிர முயற்ச்சியில் இறங்கினர்





Comments