விரைவு பேருந்து லாரியை மோதி எரிந்ததில் ஒன்பது பயணிகள் காயம்
- kumara885
- Oct 24, 2025
- 1 min read

பத்து பாஹாட்- ஒன்பது பயணிகளை ஏற்றி வந்த விரைவுப் பேருந்து ஒன்று நள்ளிரவு கிலோமீட்டர் 78.7 வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் மோதியதால் தீப்பிடித்தது.
சம்பவத்தின் போது விரைவு பேருந்து ஜொகூரில் லார்கின் செண்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் நோக்கி பயணத்தில் ஈடுபட்டிருந்ததாக பத்து பாஹாட் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் ஷாருல் அன்வார் முஷாடாட் அப்துல்லா கூறினார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்ததும் அப்பேருந்து சாலையோரம் இருந்த லாரியை தவிர்க்க முடியாமல் மோதியதில் தீப்பற்றி எரிந்தது.
இதனால் 47 வயது பேருந்து ஓட்டுனர்,28 முதல் 48 வயதுக்குட்பட்ட ஒன்பது பயணிகள லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.
இதனிடையே 35 வயது லாரி ஓட்டுனர் எந்த காயமும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பினார்.
பேருந்து ஓட்டுனரும் அனைத்து பயணிகளும் பேருந்து தீப்பிடிப்பதற்கு முன் வெளியேறி உயிரை காப்பாற்றிக்கொண்டனர்.
இச்சம்பவம் நள்ளிரவு சுமார் 12.10 மணியளவில் நிகழ்ந்துள்ளது.





Comments