top of page

வேலைக்குச் செல்லும் வழியில் இரு மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

  • kumara885
  • Oct 15, 2025
  • 1 min read



கெமாமான் அக்டோபர் 15- வேலை இடத்திற்குச் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.


இத்துயரச் சம்பவம் இங்குள்ள தெலுக் காலோங்கில் இரும்பு தொழிற்சாலை முன் உள்ள சமிக்ஞை விளக்கு முச்சந்தி சாலையில் நிகழ்ந்தது.


கிலோமீட்டர் 145 கோலதிரங்காணு-குவந்தான் சாலையில் காலை 8 மணி ஏற்பட்ட இவ்விபத்தில் விபத்தில் சிக்கிய ஷாம்சுடின் யூசொப்,39 வயது, முகமது அலிஸ் இஸ்மயில்,36 வயது தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்குள்ளாகி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.


சம்பவதின்போது திரங்கானு நீர் வாரியத்தின் ஊழியரான ஷாம்சுடின் கெர்தேவிலுள்ள தமது வேலை அலுவலகத்துக்கு மோட்டார் கைக்கிளில் சென்றுகொண்டிருந்ததாக நம்பம்படுகிறது.


இதனிடையே அலிஸ் இரும்புத் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தபோது இருவரும் இவ்விபத்தில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே மோதி விபத்துக்குள்ளாகினர்.


Comments


bottom of page