13 வயது மாணவியின் கண்கள் மூடப்பட்டு வாயில் உணவு தினித்து பகடிவதை
- kumara885
- Oct 18, 2025
- 1 min read

கோலாலம்பூர் அக்டோபர் 18- இங்குள்ள சமயக் கல்வி பள்ளி ஒன்றில் 13வயது மாணவியின் கைகள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு வாயில் உணவுகள் தினிக்கப்பட்டு பகடிவதைக்கு ஆளானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அம்மாணவியான ஐஷா தாம் அடிக்கடி பள்ளியில் இதர மாணவர்களின் பகடிவதைக்கு ஆளாவதாகவும் ஒருமுறை 10 வயது மாணவர் தன்னுடைய மூக்குக்கண்ணாடியை உடைத்துள்ளதாகவும் தன் தாயார் 30 வயதான ஹிடாயாவிடம் வருத்ததுடன் முறையிட்டுள்ளார்.
" நான் என் மகள் சமயக் கல்வியில் பாண்டித்தியம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அந்த சமய பள்ளியில் சேர்த்து இப்பொதுதான் ஒரு மாதம் நிறைவடைகிறது.
"ஆனால், அவள் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்துள்ளாள்.
"இக்குறுகிய காலத்தில் என் மகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு நிலைமை கொண்டு செல்லும் என்று கனவிலும் நினைக்கவில்லை, பேரதிர்ச்சியாக இருக்கிறது.
"இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த செயலுக்கு காரணகர்த்தாயாரும் பொருப்பேற்காதது அதிர்ச்சியாக இருக்கிறது," என்று வருத்தப்பட்டுக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தங்கும் விடுதியின் பாதுகாவலர் புகார் கொடுத்த பிறகே கடந்த அக்டோபர் 8ஆம் நாள் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக தன் மகள் சேர்க்கப்பட்டதாக மேலும் கூறினார்.
தமது மகள் நெஞ்சு வலிக்கின்றது என்று சொன்னதும் அவள் சிகிச்சைக்காக பத்துமூடா சுகாதார கிளினிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் சொன்னார்.
பிறந்தது முதலே ஐஷாவிற்கு இருதய பிரச்சனை இருந்தது ஆனால் இந்நாள் வரை எந்த ஒரு சுகாதார பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்றார்.
தன் மகளின் கையில் " துளைந்து போ" எனும் வாசகம் எழுதப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ள தன் மகளுக்கு ஏற்பட்ட பகடிவதை குறித்து நீதி வேண்டி செந்தூல் மாவட்ட காவல்துறையிடம் கடந்த அக்டோபர் 9ஆம் நாள் புகார் ஒன்றை அளித்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.





Comments