top of page

16 வயது மாணவியைக் கொலை செய்த மாணவனுக்கு 7 நாள் தடுப்புக் காவல்

  • kumara885
  • Oct 15, 2025
  • 1 min read

பெட்டாலிங் ஜெயா 15 அக்டோபர்- நேற்று பண்டார் உத்தாமா இடைநிலைப்பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் 14 வயது மாணவரால் கொலைசெய்யப்பட்டதை அடுத்த சந்தேகத்துக்குரிய அம்மாணவன் போலிசாரால் கைது செய்யப்பாட்டான்.


அந்த மாணவன் சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினமே கைதானதாக அரச மலேசிய போலிஸ் படைத் தலைவர் டத்தோஶ்ரீ அகமது காலிட் இஸ்மயில் உறுதிபடுத்தினார்.


இன்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை அந்நபரை மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.


மாஜிஸ்திரெட் ஷாரில் அன்வார் அகமது முஸ்தபா அம்மாணவனை 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க ஆணையிட்டார்.


அவ்வகையில் முதலாம் படிவம் பயிலுன் அம்மாணவன் இன்று தொடங்கி எதிர்வரும் 21 அக்டோபர் வரை தடுப்புக் காவலில் தொடர் விசாரணைக்காக அடைக்கப்படுவான்.


போலிஸ் இச்சம்பவத்தை செக்‌ஷன் 302 குற்றவியல் பிரிவின் கீழ் கொலை குற்றத்திற்காக விசாரணையை முடக்கிவிட்டுள்ளனர்.


குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிபட்சம் மரண தண்டனை அல்லது 30 வருடத்திற்கும் மேல் போகாத சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும்.


நேற்று சுமார் காலை 9.30 மணிக்கு நடந்த இச்சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


அம்மாணவன் பயன்படுத்திய ஆயுதம் இணையத்தின் வழி வாங்கியதாக நம்பப்படுகிறது.


Comments


bottom of page