top of page

18 வயதில் நான் குண்டர் கும்பலால் கடத்தப்பட்டேன் - பெர்பாதோஃப்

  • kumara885
  • Oct 31, 2025
  • 1 min read
பெர்பாதோஃப்
பெர்பாதோஃப்


லண்டன் - தமக்கு 18 வயது இருக்கும் போது ஒரு குண்டர் கும்பலால் கடத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டு முன்னாள் மென்செஸ்டர் யூனைடெட், டோட்டன்ஹம் ஸ்பர்ஸ் நட்சத்திர அட்டக்காரர் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


பெர்பாதொஃப் அச்சப்பவத்தின் போது பல்கேரிய கிளப்பான சிஎஸ்கெஏ சோபியா காற்பந்து அணிக்கு விளையாடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தாம் எப்படி குண்டர் கும்பலிடம் சில மணி நேரங்களுக்கு பிடிப்பட்டது பற்றி விளக்கமாகக் கூறினார்.


"நான் சக ஆட்டக்காரரால் நண்பர்களைச் சந்திப்பதற்காக ஒரு உணவகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.


“அங்குச் சென்றடைந்ததும் ஓர் ஆடவர் தனியாக அமர்ந்திருந்த வேளையில் மற்ற மூன்று மேஜையில் பெரிய உருவம் படைத்த வாட்டம் சாட்டமான ஆண்கள் அமர்ந்திருந்தனர்.


"அங்கே என்னைத் தனியாக நண்பன் விட்டுச் சென்றதும் நான் ஓர் ஆடவருக்கு முன் கட்டாயப்படுத்தி அமர்த்தப்பட்டேன்.


"ஆப்போது அந்த ஆடவன் தன்னை 'தி கூக் எனும் அடைமொழியுடைய பெயரை அறிமுகப்படுத்திக்கொண்டதும் நான் மற்ற காற்பந்து கிளப்புக்கு செல்ல வேண்டும் என்று அதிகாரத்துடன் கூறினான்.


"நான் தற்போதுள்ள கிளப்பில் சந்தோசமாக விளையாடி வருகின்ற வேளையில் வேறு கிளப்புக்கு மாற்றலாகிச் செல்ல விருப்பமில்லை என்றதும், அதை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் குரலில் கூறினர்,"என்று பெர்பாதொஃப் குறிப்பிட்டார்.


அப்போது தனக்குள் ஒருவித நடுக்கமும் பயமும் சூழ்ந்து கொண்டதாகவும், உடனே தன் தந்தையைத் தொடர்பு கொண்டு அவரிடம் முறையிட வேண்டும் என்று தோன்றியதாக மேலும் கூறினார்.


தம்மை சுமார் மூன்று மணி நேரமாக அக்குண்டர் கும்பல் தடுத்துவைத்ததாகவும் பிறகு தந்தையைத் தொடர்பு கொள்ள அனுமதித்ததாகவும் சொன்னார்.


"நான் தந்தையைத் தொடர்பு கொண்ட பிறகே அவர்கள் என்னை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்," என்று பெர்பாதோஃப் மேலும் நினைவுகூர்ந்தார்.

Berbatov mendedahkan dia ditahan di restoran tersebut selama dua hingga tiga jam sebelum akhirnya dibenarkan menghubungi bapanya dan dilepaskan.


Comments


bottom of page