top of page

மறுசுழற்சி நெகிழியில் கைவிடப்பட்ட பெண் குழந்தை

  • kumara885
  • Oct 28, 2025
  • 1 min read


சுபாங் ஜெயா- தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த பெண் சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மறுசுழற்சி நெகிழியில் கண்டெடுக்கப்பட்டது.


இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஜாலான் யூஎஸ்ஜெ 9/5K இல் வீட்டின் முன்புறத்தில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டது.


இத்தகவலை சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமாட் உறுதிபடுத்தினார்.


"காலை சுமார் 10.27 மணிக்கு போலிஸ் பச்சிளம் குழந்தை ஒன்று கைவிடப்பட்டது குறித்த தகவலைப் பெற்றது.


சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல் அதிகாரிகள் அங்கே வீட்டின் முன் புறத்தில் நெகிழி பையில் இன்னும் தொப்புள் கொடி அகற்றப்படாத நிலை உயிருடன் பெண் குழந்தையைக் கண்டனர்," என்றார்.


தொடர் பரிசோதனையின் போது அக்குழந்தை இன்னும் ஆரோக்கியமாக உள்ளதென்றும் அதன் எடை 2.6 கிலோகிராம் என்றும் அவர் மேலும் கூறினார்.


தற்போது அவசர சிகிச்சைக்காக அக்குழந்தை தற்போது ஷா ஆலாம் பெரிய மருத்துவமனையில் இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார்.


Comments


bottom of page