top of page

ஃபீஃபா அரசியல் செய்கிறது, இறுதிவரை போராடுவேன் - தெங்கு மாஹ்கோத்தா ஜோகூர்

  • kumara885
  • Nov 5, 2025
  • 1 min read
ஃபீஃபா மலேசிய காற்பந்து விவகாரத்தில் அரசியல் செய்வதாக சாடல்
ஃபீஃபா மலேசிய காற்பந்து விவகாரத்தில் அரசியல் செய்வதாக சாடல்


கோலாலம்பூர் - போலி ஆவனங்களைப் பயன்படுத்திய குற்றஞ்சாட்டில் ஆறு மலேசிய பாரம்பரிய விளையாட்டாளர்களை ஓராண்டுக்கு நீக்கம் செய்துள்ள விவகாரத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை நிராகரித்துள்ள உலகக் காற்பந்து சம்மேளனத்தின் செயல் கண்டனத்துக்குரியது என்று ஹரிமாவ் மலாயாவின் ஆலோசகரான துங்கு மாஹ்கோத்தா ஜோகூர் சாடினார்.


மேலும், அந்த உலக காற்பந்து சம்மேளனம் இவ்விவகாரத்தில் அரசியல் செய்வதாக கண்டித்துள்ளார்.


காற்பந்து சமேளனத்திலுள்ள விதிமுறைகளை தவறாகப் பயன்படுத்தி மலேசிய பாரம்பரிய விளையாட்டாளர்கள் நீதியற்ற முறையில் தண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டார்.


"அரசியல் நோக்கத்துடன் அநீதியான முறையில் தண்டிக்கப்பட்ட அனைத்து விளையாட்டாளர்களையும் நான் தற்காப்பேன்.


"ஃபீஃபா அதன் காற்பந்து விதிமுறைகளை தப்பாக புரிந்துவைத்துக்கொண்டு அரசியல் நோக்கத்தில் செயல்பட்டுள்ளது.


"உலக காற்பந்து சம்மேளனம் சட்ட விதிமுறைகளைத் தப்பாகப் பயன்படுத்தி விளையாட்டாளர்களைத் தண்டித்துள்ளது.


" ஆர்ட்டிகள் 22 விதிமுறை என்ன சொல்கின்றதென்றால் யாரெனும் ஆவனங்களை போலியாக்கினாலோ அல்லது போலி ஆவணங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே தண்டிக்க முடியும்.


"அவ்வகையில், இந்த ஆர்ட்டிகள் 22 இந்த ஏழு பாரம்பரிய விளையாட்டாளர்கள் விவகாரத்தில் பொருந்தாது என்பதுதான் உண்மை. அவை தவறாக அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுள்ளது," என்று தமது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


"அவ்வகையில் இந்த தண்டனை அடிப்படை சட்டமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது..இதில் அரசியல் நோக்கம் இருப்பது நிரூபனமாகிறது," என்றார்.


இந்த விவகாரத்தை அவர் இத்துடன் விடப்போவதில்லை என்று சூளுரைத்துள்ளார்.


சிலர் தீர ஆராயாமல் கூச்சலிடுகின்றனர், ஆனால் நான் பாரம்பரிய விளையாட்டாளர்கள் பின்னால் உள்ள உண்மைக்காக போராடுவேன்.


அதுமட்டுமின்றி இந்த விவகாரம் இதன் பிறகு விளையாட்டு தீர்வுஆய்வு நீதிமன்றத்திற்கு (CAS) கொண்டு சென்று போராடவிருப்பதால் நான் இந்த விளையாட்டாளர்களுக்காக பக்கபலமாக இருப்பேன். அவர்களுக்கு நீதி கிடைக்க எவ்வளவு பணம் செலவானாலும் இறுதிவரை போராடுவேன்," என்று சூளுரைத்துள்ளார்.



Comments


bottom of page