top of page

ஃபீஃபா ஆசியான் காற்பந்த்து கோப்பை அறிமுகம்

kumara885
Oct 27, 2025
1 min read

ஃபீஃபா ஆசியான் காற்பந்த்து கோப்பை அறிமுகம்


கோலாலம்பூர் - உலகக் காற்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் ( ஃபீஃபா) அதிகாரபூர்வமாக ஃபீஃபா ஆசியான் காற்பந்து கோப்பையை அறிமுகம் செய்தது.


மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் உலக காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் இன்ஃபந்தீனோ அறிவித்து அதன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.


ஆசியான் கூட்டமைப்பில் மட்டும் 700 மில்லியன் காற்பந்து ரசிகர்கள் இருப்பதாக அவர் சொன்னார்.


"இந்த புதிய ஆசியான் காற்பந்து கோப்பை அறிமுகம் ஆசியானில் அங்கம் வகிக்கும் 11 நாடுகளும் உலக ரீதியில் காற்பந்து மேம்பாட்டினை மிளிரச் செய்யும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.


இருப்பினும் ஹரிமாவ் மலாயாவின் ஏழு பாரம்பரிய விளையாட்டார்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Comments


bottom of page