top of page

அதிபர் டோனல்ட் ட்ராம்ப்பின் "ஏர் போர்ஸ் வான்" மலேசியா வந்தடைந்தது

  • kumara885
  • Oct 26, 2025
  • 1 min read
அதிபர் டோனல்ட் ட்ராம்ப்பின் "ஏர் போர்ஸ் வான்" மலேசியா வந்தடைந்தது
அதிபர் டோனல்ட் ட்ராம்ப்பின் "ஏர் போர்ஸ் வான்" மலேசியா வந்தடைந்தது



கோலாலம்பூர் - அமேரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தற்போத்து மலேசியா வந்துள்ளார்.


அந்த உலக வல்லரசின் அதிபரை ஏற்றி வந்த ஏர் போரா வான் அதிகாரப்பூர்வ விமானம் இன்று காலை 10.15க்கு பாதுகாப்பாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிரங்கியது.


இரண்டாம் முறையாக அமேரிக்க அதிபராக பதிவியேற்ற ட்ராம்ப் முதன் முறையாக மலேசியாவுக்கு ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காக வரலாற்றுப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார்.


அவரை மலேசிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ரஹிம் இதர அமைச்சர்களுடனும் மூத்த அரசாங்க அதிகாரிகளுடனும் பூங்கா ராயா தலைவர்கள் வரவேற்பு அரையில் வரவேற்றனர்.


ஆடல் பாடல் கொண்ட குழு விமான நிலையத்தில் வரவேற்றதும் தனக்கே உரிய நடனத்தை ட்ராம்ப் ஆடி அனைவரையும் மகிழச் செய்தார்.


பிறகு அதிபருடைய சிறப்பாக பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட தி பீஸ்ட் ரக கருப்பு காரில் ட்ரம்ப் அன்வாருடன் ஏரி கோலாலம்பூர் மாநாட்டுமையம் நோக்கி புல்லட் வேகத்தில் கார் சென்றது.


இதற்கிடையே தாய்லாந்து கம்போடியா இடையே அமைதி உடன்படிக்கை சடங்கில் மலேசியாவுடன் இனைந்து அதிபர் கலந்துகொள்வார் என அறியப்படுகிறது.


Comments


bottom of page