top of page

அன்வாரை தொலைபேசி பிரதமர் என்று அழைப்பது அநாகரிகம்

kumara885
Oct 21, 2025
1 min read



கோலாலம்பூர் - அன்வாரைத் 'தொலைபேசி பிரதமர்' என்று வர்ணிக்கும் எதிர்க்கட்சியின் செயல் பெரும் கண்டனத்துக்குறியது.


அச்செயலானது சர்வதேச ராஜதந்திர அரியாமை மட்டுமின்றி எதிர்க்கட்சியின் முதிர்ச்சியற்ற செயலும் கூட என்று பாசிர் கூடாங் மக்கள் நீதி கட்சியின் தொகுதித் தலைவர் முராட் ஜைலானி சாடினார்.


பிரதமரின் செயல் வெற்றியைத் தந்த ஒரு இராஜதந்திர முயற்ச்சி என்று ஒரு சில எதிர்கட்சித் தலைவரும் தொண்டரும. புரிந்துகொள்ளத் தவறினார்.


"உலகத் தலைவர்களுடனான அன்வாரின் நல்லத் தொடர்பும் மலேசியாவுக்கு பெரிய வாய்ப்பைத் தந்துள்ள்து.


"அஃது நாட்டின் பொருளாதாரத்தை உறுதியாக்கியுள்ளதுமட்டுமின்றி மனிதநேய விவகாரமும் ராஜதந்திர முறையில் தீர்வுகாணப்பட்டுள்ளது.


"ஆனால் தேசிய கூட்டணி நாட்டை ஆட்சி செய்தபோது நிறைய நாட்டின் விவகாரங்களைத் தீர்ப்பதில் தோல்வியைக் கண்டுள்ளது," என்றார்.


Comments


bottom of page