top of page

ஆசிய வெற்றியாளர் கின்னம்: சீன கிளப்பை ஜேடிதி பந்தாடியது

  • kumara885
  • Nov 6, 2025
  • 1 min read
சீன கிளப்பை ஜேடிதி பந்தாடியது.
சீன கிளப்பை ஜேடிதி பந்தாடியது.

இஸ்கன்டார் புத்ரி - நேற்று இங்குள்ள சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆசிய வெற்றியாளர் கின்னக் காற்பந்தாட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து விளையாடிய ஜேடிதி சீனாவின் ஷாங்ஹாய் ஷென்ஹுவா அணியை 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் பந்தாடியது.


இந்த வெற்றியின் மூலம் ஜேடிதி அணி 3 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆட்டம் தொடங்கிய முதல் பகுதி ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் தென்னகப் புலி என்று அழைக்கப்படும் ஜெடிதி முதல் கோலை அடிக்க முற்பட்டது ஆனால் மின்னல் வேகத்தில் வந்த் அப்பந்தை எதிரணி கோல் பாதுகாவலர் லாவகமாக பிடித்தார்.


ஆயினும், எதிரணியின் வைராக்கியத்தை உடைக்க ஜெடிதி அணிக்கு மற்றோரு பொன்னான வாய்ப்பு கிட்டியது ஆயினும் 22ஆம் நிமிடத்தில் அடித்த அக்கோல் தடைசெய்யப்பட்டது.


ஆயினும் பிற்பகுதி ஆட்டத்தில் ஜெடிதி கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி வெற்றி பெற்றது.



Comments


bottom of page