top of page

ஆயுதமேந்தி கலவரம் செய்ததாக 11 பேர் கைது

kumara885
Nov 4, 2025
1 min read


மீரி - ஆயுதமேந்தி கலவரத்தில் ஏற்பட்டதற்காக 11 ஆடவர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் திங்கட்கிழமை அதிகாலையன்று மீரி வாட்டர்ப்ரொன்டில் நிகழ்ந்தது.


இச்சம்பவம் குறித்த கானொளி ஒன்று சமூக வளைத்தளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து அந்த ஆடவர்கள் அனைவரும் கைதாகியுள்ளனர்.


இரு ஆடவர்களின் தோள்பட்டை உரசிக்கொண்டதால் வந்த அதிருப்தியில் இந்த கலவரம் ஏற்பட்டதாக மீரி மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகம்மது ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.


அதிகாலை வேளை சுமார் 2.05 மணிக்கு ஏற்பட்ட அக்கலவரத்தில் ஒருவர் காயமடைந்ததாக அவர் மேலும் உறுதிபடுத்தினார்.


"தற்போது காயமடைந்த அந்நபருக்கு மீரி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


இதனிடையே, அக்கலவரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையின் வழி, போலிசார் சில ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.


தற்போது இச்சம்பவத்தை காவல் துறையினர் செக்‌ஷன் 324/148 குற்றவியல் பிறிவின்ன் கீழ் விசாரனை நடத்தி வருகின்றனர்.


 
 
 

Comments


bottom of page