top of page

ஆறு வயது சிறுவன் கழுத்து அறுபட்டதில் காயம்

  • kumara885
  • Oct 28, 2025
  • 1 min read

ஆறு வயது சிறுவன் கழுத்து அறுபட்டதில் காயம்


பத்து பாஹாட்- நேற்று இங்குள்ள பாரிட் ராஜா எனும் இடத்தில் ஆறு வயது சிறுவன் கழுத்தில் அறுபட்டு படுகாயமானது அவ்வட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த சிறுவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் காவல் துறை இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.


நேற்று காலை 9 மணிக்கு சுமார் 40 வயதுமிக்க உள்ளூர் பெண்மனியிடம் இருந்து காவல் துறை இந்த புகாரைப் பெற்றதாக மாவட்ட காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் ஷாருல்னுவார் முஷடாட் கூறினார்.


" பாரிட் ராஜாவில் உள்ள தமது இல்லத்தில் உறங்கிக்கொண்டிருந்த அப்பெண் சுமார் காலை 5.30 மணிக்கு கண் விழித்து பார்த்தபோது அருகே உறங்கிக்கொண்டிருந்த தமது ஆறு வயது மகனின் கழுத்தில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது, " என்றவர் மேலும் கூறினார்.


இச்சம்பவம் குறித்து காவல் துறை செக்‌ஷன் 326 கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இச்சம்பவத்தின் உள்நோக்கம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.


பொதுமக்கள் தேவையின்றி இச்சம்பவம் குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.


Comments


bottom of page