top of page

இடைநீக்கம் செய்தாலும் நான் பாஸ், பெரிகாத்தான் நெஷனலுக்கே உண்மையாக இருப்பேன. -வான் பைசால்

kumara885
Oct 17, 2025
1 min read
Wan Ahmad Fayhsal
Wan Ahmad Fayhsal

கோலாலம்பூர் அக்டோபர் 16- தான் தாற்காலிகமாக பெர்சத்துவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டாலும், கட்சிக்கும் தேசிய கூட்டணிக்கும் (பெரிக்காத்தான் நெஷனல்) என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் பைசால் வான் அஹ்மாட் கமால் திட்டவட்டமாகக் கூறினார்.


மடானி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனநாயக செயல் கட்சியிடமிருந்து அழைப்பு வந்தாலும் அதனை அவர் நிராகரித்ததோடு தாம் என்றும் பாஸ், பெரிக்காத்தான் நெஷனலின் போராட்டத்தை என்றும் அடமானம் வைக்கமாட்டேன் என்று சூளுரைத்துள்ளார்.


"மாச்சாங் உறுப்பினர் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் என்னைக் கேட்டார்.


" ஆனால், எனக்கே உண்மையான காரணம் தெரியவில்லை எதற்காக நான் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டேன் என்று கடிதத்தில் தெரிவிக்கப்படவில்லை, பாகோ உறுப்பினர்( டான்ஶ்ரீ முகைதீன் யாசின்) அவர்களைக் கேழுங்கள் என்று பதில் கூறினேன்.


" பாக்காத்தான் ஹரப்பானில் வந்து இனையுங்கள் என்று ஜெலுத்தோங் அழைப்பு விடுத்தார்.ஆனால் உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி, நான் என்றும் பாசுக்கும் பெரிக்காத்தானுக்கும் விசுவாசமாக இருப்பேன், மாச்சாங் மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்க மாட்டேன்," என்று திட்டவட்டமாகக் கூறினார்.


Comments


bottom of page