இந்திரா காந்தியின் மகளுடன் மாயமான கணவரைத் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையை போலிஸ் எடுக்கும்
- Editorial
- Nov 11, 2025
- 1 min read

புத்ராஜெயா - முஸ்லிம் பெயருடன் ஒருபட்சமாக மகளை மனைவியின் அனுமதியின்றி மதம் மாற்றி ஓட்டம்பிடித்து இதுநாள்வரை மாயமான இந்திரா காந்தியின் கணவனை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலிஸ் மும்முரமாக இறங்கும்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட அவ்வாடவர் தற்போது பூடி95, ரஹ்மா உதவித் தொகையையும் பெற்று வருவதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதன் எதிரொலியாக இந்த பதிலை உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபூடின் நசுதியோன் இஸ்மாயில் தந்தார்.
ஆனால், தேடப்பட்டுவரும் அந்நபர் அராசாங்க சலுகைகளை அனுபவித்து வரும் நிலை குறித்து தமக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
"இது ஒரு சட்ட விவகாரம் என்பதால் மக்களை எதிர்கொள்ள இவ்விவகாரம் தொடர்பான போதிய ஆவணங்களை தயார்படுத்தும்படி நான் போலிசாரிடம் சொல்கிறேன் என்றார்.
இங்குள்ள புத்ராஜெயாவில் தமது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவ்வர் மேற்கண்டவாறு சொன்னர்.
கடந்த அக்டோபர் மாதத்தில் ரிடுவான் அப்துல்லா எனும் இஸ்லாமிய பெயருடன் பதுங்கியுள்ள இந்திராவின் கணவன் தற்போது இந்நாட்டினுள் நடமாடி வருவதாகவும் அரசாங்க சலுகைகளான பூடி95, சாரா உதவித்தொகையையும் பயன்பெற்று வருவதாக சமூக ஊடகத்தில் தகவல் பரவியது.
இந்த விவகாரத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் இந்திராவுடைய மகளை அனுமதியில்லாமல் கடத்திகொண்டு மாயமானது குறித்து தேடும் தகவல் தொடர்பான விவகாரத்தில் போலிசின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த புதிய தவல் சமூக வளைத்தளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
அவன் இந்நாட்டை விட்டு அண்டை நாட்டுக்கு தப்பியிருக்கலாம் என்று போலிசார் 2020ஆம் ஆண்டில் அறிக்கையில் கூறியிருந்தது.
ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உடனே ரிடுவான் அப்துல்லாவை போலிசர் தேடி பிடித்து கைது செய்யும்படியும் கடத்திச்செல்லப்பட்ட இந்திராவின் மகளை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தது.





Comments