இமாலய பனிச்சரிவில் மூன்று மலையேறிகள் பலி
- kumara885
- Nov 5, 2025
- 1 min read

காட்மாண்டு- நேபாளத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இமாலய சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில், ஒரு பிரெஞ்சு நாட்டு நபர் மற்றும் இரண்டு நேபாளர்கள் உள்பட குறைந்தது மூன்று மலையேறிகள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் திங்கட்கிழமையன்று காலை உள்ளூர் நேரப்படி 9.00 மணியளவில் (03:15 GMT) டோலாகா மாவட்டத்தில் உள்ள யாலுங் ரி மலை அடிவார முகாமிற்கு அருகே ஏற்பட்டது.
மேலும் நான்கு மலையேறிகளன இரு இத்தாலியர்கள், ஒரு ஜெர்மனியர் மற்றும் ஒரு கனடியரும் இப்பேரிடரில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தற்போது, அவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களும் காணாமல் போனவர்களும் மொத்தம் 12 பேர் கொண்ட மலையேறி பயணக்குழுவில் இருந்தனர் என்று தகவல் போலிசாருக்கு கிடத்துள்ளது.
அவர்கள் மற்றும் உள்ளூர் மலையேறி வழிகாட்டிகள் பனிச்சரிவு ஏற்பட்டதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பயணத்தைத் தொடங்கியிருந்தனர் என்று மாவட்ட காவல் துறைத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“இதுவரை மூன்று உடல்கள் மீட்புப் படையினரால் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேளையில், மேலும் நால்வரை மீட்புப் பணி குழுக்கள் தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன,” என்று உள்ளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜியான் குமார் மஹதோ பிபிசியிடம் தெரிவித்தார்.
மீதமுள்ள இரு நேபாளர்கள் அந்தக் குழுவில் வேலை பார்த்தவர்களா அல்லது தனியாக மலையேறிகளா என்பது இதுவரை தெளிவான தகவல் கிடைக்கவில்லை.
மஹதோ அவர்கள் கூறுகையில், ஒரு மீட்பு ஹெலிகாப்டர் திங்கட்கிழமை டோலாகா மாவட்டத்தின் நா காஉன் பகுதியில் தரையிறங்கியுள்ளது.
அது யாலுங் ரி முகாமிலிருந்து ஐந்து மணி நேர நடைதூரத்தில் அமைந்துள்ளது.
மீதமுள்ள காணாமல் போன மலையேறிகளைத் தேடும் பணிகள் மோசமான வானிலை மற்றும் போக்குவரத்து சிரமங்களால் தடைபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காட்மாண்டு போஸ்ட் தெரிவித்ததாவது, அந்தக் குழு 6,332 மீட்டர் (20,774 அடி) உயரமுடைய அருகிலுள்ள டோல்மா காங் சிகரத்தை ஏறத் தயாராகி வந்துள்ளது தெரியவந்துள்ளது.





Comments