இயற்கைக்கு மாறாக பூனையை புணர்ந்த நேப்பாள அடவர் கைது

ஷா ஆலாம் - இயற்கைக்கு மாறாக வளர்ப்புப் பிராணியான பூனையைப் புணர்ந்ததோடு அதை அடுக்குமாடியிலிருந்து கீழே தூக்கியெறிந்துவிட்டு தப்பித்த நேப்பாள ஆடவர் ஒருவர் போலிசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டான்.
இந்த இழிவான செயலை அந்த ஆடவன் இங்குள்ள கோத்தா கெமுனிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செய்ததாக ஷா ஆலாம் மாவட்ட காவல் துறையின் இடைக்காலத் தலைவர் சூப்பரின்தென்டன் ரம்சேய் அனக் எம்போல் உறுதிபடுத்தினார்.
கடந்த 15ஆம் தேதி சுமார் நள்ளிரவு 12.30 க்கு அங்கிருக்கும் குடியிருப்பாளர் ஒருவர் நேப்பாள ஆடவன் நிர்வாணமாக பூனையுடன் கண்டதும் அவன் அப்பூனையைப் புணர்ந்துள்ளதாக சந்தேகித்துள்ளார்.
அம்மாதுவின் கணவர் நான்காம் மாடிக்கு அந்த ஆடவனின் செயலைக் கண்டிப்பதற்காக விரைந்துள்ளார்.
அவர்களைக் கண்டதும் நேப்பாள ஆடவர் பூனையை 4ஆவது மாடியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு ஒட்டம் எடுத்துள்ளான்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சம்பவத்தை அந்த குடியிருப்பாளர் தனது கைத்தொலைபேசியைக் கொண்டு கானொளி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த தகவலைப் பெற்றதும் போலிசார் சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் சுமார் மாலை 4.45 மணிக்கு அதே அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாவலராகப் பணிபுரியும் 33 வயதுடைய நேப்பாள ஆடவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
இசம்பவத்தை போலிசார் தற்போது செக்ஷன் 377 குற்றவியல் சட்டத்தின் கீழ் பிராணியுடன் இயற்கைக்கு மாறான முறையில் வல்லுறவில் ஈடுபட்ட குற்றம் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.





Comments