இருமல் மருந்து குடித்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு
- kumara885
- Nov 1, 2025
- 1 min read

மத்திய பிரதேசம் - இங்குள்ள பிச்சுவா எனும் கிராமத்தில் செயல்படும் தனியார் மருந்தகம் ஒன்றில் வாங்கிய இருமல் மருந்து உட்பட மேலும் சில மருந்துகளைக் கொடுக்கப்பட்ட ஐந்து மாத பெண் சிசு பரிதாபமாக உயிரிழந்தது அவ்வட்டாரத்தில் பீதியை கிளப்பியுள்ளது.
இறந்த அக்குழந்தையின் பெயர் ருஹி மினொதே எனறு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கு முன் இதே மாவட்டத்தில் சுமார் 20 சிறார்கள் பாதிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் சிறுநிரகம் செயலிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தின் போது உடல் நலமில்லாத அக்குழந்தையை பெற்றொர்கள் பிச்சுவாவிலுள்ள அரசாங்க கிளினிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர் ஆனால் அங்கே கவனிக்கப்படாததால் தனியார் மருந்தகத்தை நாடியுள்ளனர்.
தனியார் மருந்தகத்தில் அவர்கள் மூலிகை இருமல் மருந்தை வாங்கி அதை குழந்தைக்குத் தந்துள்ளனர்.
"ஆரம்பத்தில் இருமல் மருந்தைக் குடித்ததும் குழந்தை ஆரோக்கியத்தில் சற்று முன்னேற்றம் கானப்பட்டது ஆனல் மருநாள் அவளது சுகாதாரம் மிகவும் மோசமானது.
"நாங்கள் பதரிப் போய் மகளை சமூக சுகாதார மையத்துக்கு தூக்கிச் சென்றோம் ஆனால் அவள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் உறுதிபடுத்தினார்," என்றனர்.
இச்சம்பவத்தால் போலிஸ் முதல் தகவல் அரிக்கையை திறந்து செக்ஷன் 194 கீழ் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த தனியார் மருந்தகத்தை நடத்தி வந்த இரு அடவர்களை போலிசார் கைது செய்து விசாரித்து வருவதாக அவர் மேலும் சொன்னார்.
அந்த மருந்தகத்தில் உள்ள அனைத்து மருந்துகளையும் பறிமுதல் செய்து அந்த மருந்தகம் மூடப்பட்டு மாநில சுகாதாரத் துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது.
"இதில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது நிரூபனமானால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றது.





Comments