இரவு கேளிக்கை மையத்தில் பெண் மானபங்கம்
- kumara885
- Nov 2, 2025
- 1 min read

கோலாலம்பூர் - நேற்று இங்குள்ள ஜாலான் மெட்ரோ பூடு 2இல் அமைந்திருக்கும் இரவு கேளிக்கை மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் பெண் ஒருவார் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.
வங்சா மாஜு மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகம்மது லசிம் இஸ்மாயில் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
சுமார் 33 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து காவ்வல் துறை காலை 8.09 மணிக்கு மானபங்கம் செய்யப்பட சம்பவம் குறித்த புகாரைப் பெற்றுள்ளது.
"அப்புகாரில், தம்மை சுமார் 27 முதல் 28 வயதுக்குட்பட்ட உள்நாட்டு அடவர் ஒருவர் மானபங்கம் செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"இந்த அருவருப்பான சம்பவம் இந்த இரவு கேளிக்கை மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் நடந்தேறியது," என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது, முதல் தவல் அறிக்கையைப் பதிவு செய்து போலிசார் தீவிரமாக இந்த சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.
"மேலும், இச்சம்பவம் குறித்து இதுவரை எந்த ஒரு சந்தேகத்துக்குரிய நபரும் கைது செய்யப்படவில்லை," என்று அவர் மேலும் சொன்னார்.





Comments