ஏழு பாரம்பரிய விளையாட்டாளர்களின் தலைவிதி திங்கள் அல்லது செவ்வாய் தெரியும்
- kumara885
- Nov 2, 2025
- 1 min read

ஏழு பாரம்பரிய விளையாட்டாளர்களின் தலைவிதி திங்கள் அல்லது செவ்வாய் தெரியும்
கோலாலம்பூர் - அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் மலேசிய 7 பாரம்பரிய விளையாட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கான மேல்முறையீட்டின் முடிவு அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கத்தில் ஃபிபா தனது முடிவை நேற்று வெள்ளியன்று அறிவிக்கும் என்று பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தது.
ஆனால், அந்த அறிவிப்பு வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
மேல்முறையீட்டுக்கான வாதங்கள் கடந்த வியாழனன்ற விளையாட்டாளர்களை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களும், மலேசிஅ காற்பந்து சங்கத்தை[ பிரதிநிதிக்ககும் வழக்கறிஞர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் இறுதி முடிவுகள் இன்னும் முன்று நாட்களில் ஃபீபா அறிவிக்கும் என்று நம்பிக்கை பிறந்துள்ளது.
இதற்கு முன் ஹரிமாவ் மலாயாவுக்கு விளையாடிய ஏழு பாரம்பரிய வீரர்கள் தங்களது பூர்விகம் சம்பந்தமான ஆதாரத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு எழுவரையும் காற்பந்து சம்மேளனம் ஒரு வருட காலத்துக்கு தற்காலிகமாக நீக்கியுள்ளது.





Comments