top of page

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மென்செஸ்டர் யுனைடெட் அன்பில்டில் முதல் வெற்றி

  • kumara885
  • Oct 21, 2025
  • 1 min read

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மென்செஸ்டர் யுனைடெட் அன்பில்டில் முதல் வெற்றி


லண்டன் - கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் மன்செஸ்டர் யூனைடெட் முதல் வெற்றியை அன்பில்டில் பதிவு செய்தது.


நேற்று நடைபெற்ற இங்லிஷ் பிரேமியர் கின்ன போட்டியில் மன்செஸ்டர் யூனைடெட் லிவர்பூலை 2-1 என்ற கோல் கணக்கில் பரம எதிரியை அதன் அரங்கிலேயே தோற்கடித்து அதிரசியளித்துள்ளது.


ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் மன்செஸ்டர் யூனைடெட் முதல் கோலை அடித்து உபசரனை குழுவை அதிர செய்தது.


முதல் பாதி நேரம் வரை ஆட்டம் 1-0 என்று மென்செஸ்டர் யூனைடெட்டுக்கு சாதகமாக அமைந்தது.


ஆனால் பிற்பகுதி ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அட்டத்தை சம நிலைப்படுத்தியது.


ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை காரணம் ஆட்டம் முடிய இன்னும் 6 நிமிடம் எஞ்சியுள்ள வேளையில் மன்செஸ்டர் யூனைடெட் குழுவின் தற்காப்பு ஆட்டக்கார் ஹெர்ரி மெக்குவாயர் மின்னல் வேகத்தில் பந்தை தலையால் முட்டி தனது அனியின் வெற்றி கோலைப் புகுத்தி லிவர்பூலை வீழ்த்தியது.


Comments


bottom of page